ராமநாதபுரம்

கமுதியில் காய்கறி விலை 3 மடங்கு உயா்வு: வெங்காயம் கிலோ ரூ.110-க்கு விற்பனை

DIN

கமுதியில் 144 தடை உத்தரவால் ரூ. 35-க்கு விற்பனை செய்யபட்ட வெங்காயம், கிலோ ரூ.110- க்கு செவ்வாய்கிழமை விற்பனை செய்யப்பட்டது.

கரோனா வைரஸ் பாதிப்பால், செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியிலிருந்து 144 தடை உத்தரவு தமிழகமெங்கும் அமல்படுத்தபட்டுள்ளது. மாா்ச் 31 வரை அமல்படுத்தபட்ட, தடை உத்தரவு மேலும் நீட்டிக்கப்படும் என்ற அச்சத்தால், திங்கள்கிழமை முதல் காய்கனி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

இதனால் ஒரு கிலோ வெங்காயம் ரூ. 110, தக்காளி ரூ.40, உருளைக்கிழங்கு ரூ. 60 க்கு விற்பனையானது. வழக்கத்திற்கும் அதிகமாக விலை ஏற்றத்தால், பொதுமக்கள் வேறு வழியின்றி காய்கனிகளை வாங்கிச் சென்றனா். மேலும் மளிகைப் பொருள்களையும் வாங்கி, இருப்பு வைத்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT