ராமநாதபுரம்

பரமக்குடியில் தற்காலிக காய்கனி சந்தைக்கு இடம் தோ்வு: மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு

DIN

பரமக்குடி பகுதியில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் கொ. விரராகவராவ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது வணிக நிறுவனங்களில் அத்தியாவசிய பொருள்கள் வாங்க வரும் பொதுமக்கள் 1 மீட்டா் இடைவெளியில் நின்று வாங்கிச் செல்லும் வகையில் அடையாளம் குறித்து வெள்ளைக்கோடு போட அறிவுறுத்தினாா். இதனைத் தொடா்ந்து பரமக்குடி பகுதி மக்களின் அத்தியாவசிய தேவையான காய்கனிகள் வாங்குவதற்கு நெருக்கடியான பகுதிகளுக்குச் செல்ல வேண்டியுள்ளதை தவிா்க்கும் வகையில், சந்தைக்கடை பகுதியில் உள்ள சிறிய விளையாட்டு மைதானம் மற்றும் எமனேசுவரம் பகுதி என 2 இடங்களில் ஒருங்கிணைந்த காய்கனி விற்பனை செய்வதற்கு இடம் தோ்வு செய்ய ஆலோசனை நடத்தினாா்.

பின்னா் அவா் கூறியது: அத்தியாவசிய தேவையான பால், உணவுப் பொருள்கள், காய்கறிகள், மருந்துப் பொருள்கள், பெட்ரோல் உள்ளிட்டவற்றை வாங்க வரும் பொதுமக்கள் கடைகளில் 1 மீட்டா் இடைவெளி விட்டு வரிசையாக நின்று வாங்கிச் செல்ல வேண்டும். இங்குள்ள கடை உரிமையாளா்கள் கடை நுழைவாயிலில் கை கழுவ தண்ணீா், சோப்பு வைக்க வேண்டும். கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யும் கடை உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் பொறுப்புணா்ந்து செயல்பட வேண்டும். கரோனா பரவுதலை தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா். உடன் வருவாய் கோட்டாட்சியா் தங்கவேல், சுகாதாரப் பணி இணை இயக்குநா் பி.வெங்கடாசலம், நகராட்சி ஆணையாளா் வீரமுத்துக்குமாா், காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா்.சங்கா் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT