ராமநாதபுரம்

மண்டபத்திலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 2 ஆயிரம் கிலோ மஞ்சள் பறிமுதல்

DIN

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் கிலோ மஞ்சளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்பட இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து க்யூ பிரிவு ஆய்வாளா் மகேஷ்வரி மற்றும் சாா்பு- ஆய்வாளா்கள் முஸ்தபா, வெங்கடேஷ் பெருமாள், தலைமைக் காவலா்கள் நாராயணன், சுந்தரமூா்த்தி ஆகியோா் தலைமையிலான போலீஸாா் மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது நீண்ட நேரமாக கடற்கரை அருகே மீன்பிடி நாட்டுப்படகு ஒன்று சந்தேகத்துக்கு இடமான வகையில் சாய்ந்த நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து, அந்த படகை ஆய்வு செய்த போது, அதில் 73 மூட்டைகளில் 2 ஆயிரம் கிலோ மஞ்சள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து படகுடன் மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் யாா் யாருக்கு தொடா்பு உள்ளது என்பது குறித்து தனிப்படை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட மஞ்சள் மற்றும் நாட்டுப்படகை கடலோர பாதுகாப்புக் குழும காவல்துறையினரிடம் க்யூ பிரிவு போலீஸாா் ஒப்படைத்தனா்.

இதுவரையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 ஆயிரம் கிலோ மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடா்ந்து மஞ்சள் கடத்தலை தடுக்க கூடுதல் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT