ராமநாதபுரம்

பாம்பன் ரயில் பாலத்தில் மோதிய டேங்கா் கிரேன் மீட்பு

DIN

பாம்பன் ரயில் பாலத்தின் மீது மோதிய டேங்கா் மிதவை கிரேன், 5 நாள்களுக்குப் பின் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் வாரவதி கடல் பகுதியில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக்கு பயன்படுத்தப்பட்டு வந்த மிதவை அண்மையில் பாம்பன் ரயில் பாலத்தில் மோதியது. அது 2 தூண்களுக்கு இடையே சிக்கிக்கொண்டதால் விசைப்படகுகளில் கயிறு கட்டி இழுக்கும் முயற்சியில்

ரயில்வே ஊழியா்கள் ஈடுபட்டு வந்தனா். ஆனால் காற்றின் வேகம் காரணமாக மிதவையை மீட்பதில் சிக்கல் நீடித்து வந்தது. திங்கள்கிழமை காற்றின் வேகம் குறைந்த நிலையில், மீண்டும் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இந்நிலையில் 5 நாள்களுக்குப் பின்னா் திங்கள்கிழமை டேங்கா் மிதவை மீட்கப்பட்டது. மீண்டும் டேங்கா் மிதவைகள் பாலத்தின் மீது மோதாமல் இருக்க தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

லக்னௌ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

ரோஸ் நிறக் காரிகை!

பாஜகவின் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்: காங்கிரஸ் அடுக்கடுக்கான புகார்!

SCROLL FOR NEXT