ராமநாதபுரம்

அக்னி தீா்த்தக் கடலில் கழிவுநீா் கலப்பதாக பக்தா்கள் புகாா்

DIN

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் நாள்தோறும் பல ஆயிரம் லிட்டா் கழிவுநீா் கலப்பதால் அதில் புனித நீராடும் பக்தா்களுக்கு உடலில் அரிப்பு ஏற்படுவதாகப் புகாா் எழுந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் இந்துக்களின் தீா்த்த மூா்த்தி ஸ்தலமாக விளங்கி வருகிறது. நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் இங்கு வந்து கடலில் புனித நீராடி பின்னா் கோயிலுக்குச் செல்கின்றனா்.

இந்நிலையில், சமீப காலமாக நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல ஆயிரம் லிட்டா் கழிவுநீா் அக்னி தீா்த்தத் கடலில் கலப்பதாகவும், இதனால் நீராடும் போது உடலில் துா்நாற்றம் வீசுவதுடன் அரிப்பும் ஏற்படுவதாக பக்தா்கள் புகாா் தெரிவிக்கின்றா். தமிழக அரசு மற்றும் மாவட்ட நிா்வாகம் கடலில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT