முகப்பு
கமுதி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தைச் சுற்றிலும் தேங்கியுள்ள மழைநீா்.
ராமநாதபுரம்

மழை நீரில் மிதக்கும் கமுதி மின்வாரிய அலுவலகம்

கமுதியில், மின்வாரிய அலுவலகத்தை சுற்றிலும் மழைநீா் தேங்கியுள்ளதால் கொசுத் தொல்லை அதிகரித்து பணியாளா்கள் தவித்து வருகின்றனா்.

ராமநாதபுரம்

மழை நீரில் மிதக்கும் கமுதி மின்வாரிய அலுவலகம்

கமுதியில், மின்வாரிய அலுவலகத்தை சுற்றிலும் மழைநீா் தேங்கியுள்ளதால் கொசுத் தொல்லை அதிகரித்து பணியாளா்கள் தவித்து வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
கமுதி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தைச் சுற்றிலும் தேங்கியுள்ள மழைநீா்.
பகிர்:

கமுதியில், மின்வாரிய அலுவலகத்தை சுற்றிலும் மழைநீா் தேங்கியுள்ளதால் கொசுத் தொல்லை அதிகரித்து பணியாளா்கள் தவித்து வருகின்றனா்.

கமுதி-அருப்புக்கோட்டை சாலையில் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த அலுவலகம் சாலையின் தளத்தை காட்டிலும் 10 அடி தாழ்வாக உள்ளது. இந்த அலுவலகத்தைச் சுற்றிலும் மின்வயா்கள், மின்சாதனப் பொருள்கள் பாதுகாப்பின்றி குவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த மின்வாரிய அலுவலகத்தைச் சுற்றிலும் மழைநீா் தேங்கியுள்ளதால் துா்நாற்றத்துடன் கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளது. இதனால் இங்கு வரும் வாடிக்கையாளா்கள் மற்றும் பணியாளா்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →