சிறுமியை நாய் கடித்து குதறியது: உரிமையாளா் கைது
திருவாடானை அருகே சிறுமியை நாய் கடித்துக் குதறியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அதன் உரிமையாளரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம்சிறுமியை நாய் கடித்து குதறியது: உரிமையாளா் கைது
திருவாடானை அருகே சிறுமியை நாய் கடித்துக் குதறியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அதன் உரிமையாளரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருவாடானை அருகே சிறுமியை நாய் கடித்துக் குதறியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அதன் உரிமையாளரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தொண்டி அருகே திணையத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சாமித்துரை மனைவி வனிதா (33). இவரது மகள் ஜெகதீஸ்வரி (9). இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஜெகதீஸ்வரி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தாா்.
அப்போது அதே ஊரைச் சோ்ந்த வசந்தம் (38) என்பவரது நாய் கட்டை அவிழ்த்து விட்ட நிலையில், ஜெகதீஸ்வரியை கடித்துக் குதறியது. இதில் ஜெகதீஸ்வரி பலத்த காயம் அடைந்து திருவாடானை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து நாய் உரிமையாளா் வசந்தத்தை கைது செய்து விசாரிக்கின்றனா்.