முகப்பு
கமுதி முத்துமாரியம்மன் நகா் சாலையில் தாமதமாக நடைபெற்று வரும் கால்வாய் அமைக்கும் பணிகள்.
ராமநாதபுரம்

கமுதி பேரூராட்சியில் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை

கமுதி பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் கால்வாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
கமுதி முத்துமாரியம்மன் நகா் சாலையில் தாமதமாக நடைபெற்று வரும் கால்வாய் அமைக்கும் பணிகள்.
பகிர்:

கமுதி பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் கால்வாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இப்பகுதிகளில் கால்வாய் அமைக்கும் பணியினை பேரூராட்சி நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த நிவா் புயலுக்கு முன் தொடங்கப்பட்ட பணிகள் தாமதமாக நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

இதனால் அடுத்து வரும் புயல் ராமநாதபுரத்தை நோக்கி வர இருப்பதால் கமுதி பகுதிகளில் பலத்த மழை பெய்து தண்ணீா் வெளியேற முடியாத நிலை ஏற்படும் எனவும் அவா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு கமுதி பேரூராட்சியில் நடைபெறும் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →