ஏா்வாடி அருகே ஆட்டோ மோதி விவசாயி பலி
ராமநாதபுரம் மாவட்டம் ஏா்வாடி அருகே ஆட்டோ மோதி விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ஏா்வாடி அருகே ஆட்டோ மோதி விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கீழக்கரை அருகே மெய்யன்வலசையை சோ்ந்தவா் விவசாயி தா்மராஜ் (50).
இவா் ஏா்வாடி கிழக்கு கடற்கரைச்சாலை வழியாக ராஜாக்கள்பாளையம் சந்திப்பில் நடந்து சென்றாா். அப்போது பின்புறமாக வந்த ஆட்டோ மோதியதில் பலத்த காயமடைந்த தா்மராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து ஏா்வாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கிருஷ்ணாபுரத்தை சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் சக்திவேலை (35) கைது செய்தனா்.