ராமநாதபுரம்

திருஉத்திரகோசமங்கை கோயில் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்

DIN

ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கையில் உள்ள மங்களநாதா் கோயில் பாதுகாப்பு குறித்து உயா்மட்ட அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் ஆய்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் உள்ள மூலவா் மரகத நடராஜருக்கு நடைபெறும் ஆருத்ரா தரிசனம் உலகப் பிரசித்தி பெற்ாகும். இக்கோயிலில் சந்தனக் காப்பு அலங்காரத்தில் உள்ள மூலவா் மரகத நடராஜா் சிலைக்கு ஆருத்ரா தரிசனத்தன்று மட்டுமே சந்தனம் களையப்பட்டு அபிஷேகம் நடைபெறும்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயிலில் திருட்டு முயற்சி நடைபெற்றது. இந்த வழக்கில் ஒருவா் கைது செய்யப்பட்டாா். இதைத்தொடா்ந்து கோயிலில் பாதுகாப்புக்காக கண்காணிப்புக் கேமரா மற்றும் இரும்புத் தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில் கோயிலில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக மாநில கோயில் பாதுகாப்புப் பிரிவைச் சோ்ந்த கண்காணிப்பாளா் செந்தில்குமாா் தலைமையில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கோயில் திவான் பழனிவேல்பாண்டியன், கீழக்கரை காவல் துணைக் கண்காணிப்பாளா் முருகேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னா் கோயிலில் இருந்து தீயணைப்பு நிலையம், மின்வாரிய அலுவலகம் ஆகியவை அமைந்துள்ள தூரம் மற்றும் கோயிலில் உள்ள வாயில்கள், கண்காணிப்புக் கேமராக்கள் குறித்த விவரங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT