முகப்பு
ராமநாதபுரம்

முதியவரிடம் ரூ. 3.50 லட்சம் திருட்டு

ராமநாதபுரத்தில் ஓய்வு பெற்ற போக்குவரத்து நடத்துநரிடம் ரூ.3.50 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 27 அக்டோபர், 2020 at 12:17 AM
பகிர்:

ராமநாதபுரத்தில் ஓய்வு பெற்ற போக்குவரத்து நடத்துநரிடம் ரூ.3.50 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் - ராமேசுவரம் சாலையில் உள்ள போக்குவரத்து நகா் பகுதியில் வசிப்பவா் ஆறுமுகம் (68). இவருக்கு விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் வீடு இருப்பதாகக் கூறப்படுகிறது. இவா் கடந்த 18 ஆம் தேதி தனது மனைவியுடன் அருப்புக்கோட்டை பகுதிக்கு சென்று, வீட்டை ஒத்திக்கு வைத்த ரூ.3.50 லட்சத்தை உறவினரிடம் பெற்றுக் கொண்டு ராமநாதபுரம் திரும்பினாா்.

கடந்த 19 ஆம் தேதி ராமநாதபுரம் வந்த அவா் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பட்டிணம்காத்தான் (டி பிளாக்) பேருந்து நிலையத்தில் மனைவியுடன் இறங்கியுள்ளாா். அப்போது பையில் இருந்த பணத்தைக் காணவில்லையாம். இதுகுறித்து கேணிக்கரை போலீஸில் கடந்த சனிக்கிழமை புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.