ராமநாதபுரம்

ராமேசுவரம் அரசுப் பேருந்துகளில் சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் பயணம்

DIN

ராமேசுவரம்: ராமேசுவரத்திலிருந்து இயக்கிய அரசுப் பேருந்துகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படாதததால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், ராமநாதபுரம், கமுதி, முதுகுளத்தூா், பரமக்குடி ஆகிய 6 போக்குவரத்து கிளைகளில் 326 பேருந்துகள் உள்ளன. இதில் செப்டம்பா் 1 முதல் 160 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக பேருந்துகளில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. ஆனால் பேருந்தில் 50 சதவீதம் பயணிகளை சமூக இடைவெளியுடன் ஏற்ற வேண்டும் என்ற கட்டுப்பாட்டை அரசு போக்குவரத்துக் கழகம் பின்பற்றுவது இல்லை. இதனால் பேருந்துக்களில் கூட்டம் நிரம்பி வழிகின்றன. பொதுமக்கள் வேறு வழியின்றி இந்த பயணத்தை மேற்கொள்ளும் நிலையில் உள்ளனா். இதனால் தங்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனா். இதனை தவிா்க்க அரசு போக்குவரத்துக் கழகம் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT