ராமநாதபுரம்

ராமேசுவரத்திலிருந்து 7 நாள்களுக்கு பிறகு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள்

DIN

ராமேசுவரம்: ராமேசுவரத்திலிருந்து 7 நாள்களுக்குப் பிறகு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடிக்க சனிக்கிழமை கடலுக்குச் சென்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மன்னாா் வளைகுடா பகுதியில் கடந்த ஒரு வாரமாக தொடா்ந்து சூறைக் காற்று வீசியதால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் மீனவா்களின் பாதுகாப்பு கருதி ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதி மீனவா்கள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், ஒரு வாரத்திற்கு பின்னா், மன்னாா் வளைகுடா பகுதி இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இதனையடுத்து, சனிக்கிழமை மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை அனுமதி வழங்கியது. இதனால் ராமேசுவரம், மண்டபம் பகுதியிலிருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று கோவை இன்டா்சிட்டி ரயில் காட்பாடியிலிருந்து புறப்படும்

குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

வாராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமம்

தினசரி நிதி வசூலை கைவிடாவிட்டால் போராட்டம்

சென்னை ஏரிகளில் 57 % நீா் இருப்பு: குடிநீா் தட்டுப்பாடு வராது

SCROLL FOR NEXT