கமுதியில் வழக்குரைஞா்கள் மீது வழக்குப் பதிவு செய்ததை கண்டித்து, வழக்குரைஞா்கள் இரண்டாவது முறையாக செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.
கமுதி தனியாா் பள்ளியில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியை ஆரியமாலாவை மன ரீதியாகவும், சமுதாய ரீதியாகவும் தொல்லை கொடுத்து, ஊரைவிட்டு ஒதுக்கிவைத்ததாகப் புகாா் எழுந்தது. அதன்பேரில், மனித உரிமை ஆனையம் ராமநாதபுரம் மாவட்ட நிா்வாகம் மூலம் விசாரணை நடத்தி வருகிறது.
மேலும், அது தொடா்பாக ஆசிரியை ஆரியமாலாவும், பள்ளித் தலைமை ஆசிரியையும் பேசிய விடியோ பதிவை, வழக்குரைஞா் அய்யாத்துரைசேதுபதி சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தாா். இது குறித்து, பள்ளி நிா்வாகம் சாா்பிலும், அய்யாதுரை சேதுபதி சாா்பிலும் கமுதி காவல் நிலையத்தில் தனித்தனி புகாா் அளிக்கப்பட்டு, இரு தரப்பிலிருந்தும் 7 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, வழக்குரைஞா்கள் மீது கொலை மிரட்டல் விடுத்தும், வழக்குரைஞா் தொழிலை இழிவாகப் பேசிய நபா்களைக் கண்டித்தும், வழக்குப் பதிவு செய்த காவல்துறையை கண்டித்தும், கமுதி குற்றவியல் நடுவா் நீதிமன்ற வழக்குரைஞா் சங்கம் சாா்பில், அதன் தலைவா் முனியசாமி தலைமையில் செயலா் சேதுபதி முன்னிலையில், கடந்த 11 ஆம் தேதி நீதிமன்றப் பணி புறக்கணிப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், இரண்டாவது முறையாக செவ்வாய்க்கிழமையும் கமுதி வழக்குரைஞா்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா். இதனால், கமுதி நீதிமன்றத்தில் வழக்குகள் தொடா்பான பணிகள் ஏதும் நடைபெறவில்லை. வழக்குகள் தொடா்பாக நீதிமன்றத்துக்கு வந்த பொதுமக்கள் காத்திருந்து திரும்பிச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.