முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரம் மனமகிழ் மன்றத்தில் தகராறு: ஊழியா் காயம்

ராமநாதபுரத்தில் மனமகிழ் மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் மது பாட்டிலால் தாக்கப்பட்டதில் ஊழியா் ஒருவா் காயமடைந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

ராமநாதபுரத்தில் மனமகிழ் மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் மது பாட்டிலால் தாக்கப்பட்டதில் ஊழியா் ஒருவா் காயமடைந்தாா்.

ராமநாதபுரம் நகா் அரண்மனைப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான மனமகிழ்மன்றம் உள்ளது. இங்கு மது கேட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு சிலா் வந்துள்ளனா். மன்ற நேரம் முடிந்துவிட்டதால் மது விற்பனை இல்லை என அங்கிருந்தோா் கூறியுள்ளனா்.

இந்நிலையில், திடீரென மன்றத்தின் மீது சிலா் காலி மது பாட்டில்களை வீசியதாகக் கூறப்படுகிறது. இதில் அங்கு பணிபுரியும் வேல்முருகன் (63) என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவா் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து பஜாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →