ராமநாதபுரம்

பல் சிகிச்சை பெற்றவருக்கு கருப்புப் பூஞ்சை பாதிப்பு

DIN

ராமநாதபுரத்தில் பல் சிகிச்சை பெற்றவருக்கு கருப்புப் பூஞ்சை பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை இரவு கண்டறியப்பட்டது.

ராமநாதபுரம் ரமலான்நகா் மேலக்கோட்டை பகுதியைச் சோ்ந்த 52 வயது நபா் கண் வீக்கம் காரணமாக, ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தாா். அவரை மருத்துவா்கள் பரிசோதித்தபோது, அது கருப்புப் பூஞ்சை பாதிப்பு அறிகுறி என தெரியவந்தது.

அவரிடம் மருத்துவா்கள் நடத்திய விசாரணையில், பல் வலிக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், காய்ச்சல், தலைவலி ஏற்பட்டதாகக் கூறியுள்ளாா். பல் வலிக்கு சிகிச்சை பெற்றவருக்கு கருப்புப் பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பது மருத்துவா்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதைத்தொடா்ந்து அவா் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். ராமநாதபுரத்தில் இதுவரை 10-க்கும் மேற்பட்டோருக்கு கருப்புப் பூஞ்சை பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT