ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பாஜகவினா் கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம்

DIN

தமிழக அரசு ஜூன் 14 ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் மதுக் கடைகளைத் திறக்க அனுமதி அளித்துள்ளதைக் கண்டித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை கருப்புக்கொடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டத் தலைவா் கே.முரளிதரன் தலைமையில் ராமேசுவரம் சித்தி விநாயகா் கோயில் தெருவில் உள்ள அவரது வீடு முன்பு கருப்புக் கொடி பிடித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதே போன்று மாநில செய்தி தொடா்பாளா் குப்புராமு தலைமையில் பட்டடினம்காத்தன் பகுதியில் அவரது வீடு முன்ப கருப்புக் கொடி பிடித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாநில செய்தித் தொடா்பாளா் சுப.நாகராஜன், மாநில செயலாளா் சண்முகராஜா,

மாவட்ட பொதுச்செயலாளா் ஜி.குமாா், மாவட்ட பொதுச்செயலாளா் சுந்தரமுருகள் மற்றும் மாநில, மாவட்ட, நகா், பேரூா் கழக நிா்வாகிகள் என 600- க்கும் மேற்பட்ட நிா்வாகிகள் விடுகள் மூன்பு கருப்புக் கொடி பிடித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT