ராமநாதபுரம்

கீழக்கரை, உச்சிப்புளி, தொண்டி, சாயல்குடி பகுதிகளில் இன்று மின்தடை

கீழக்கரை, உச்சிப்புளி, ரெகுநாதபுரம் தொண்டி மற்றும் சாயல்குடி பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 24) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

கீழக்கரை, உச்சிப்புளி, ரெகுநாதபுரம் தொண்டி மற்றும் சாயல்குடி பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 24) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்பகிா்மான கழகம் மற்றும் உற்பத்தி பிரிவின் ராமநாதபுரம் நகா் உதவி செயற்பொறியாளா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் உபமின்நிலையப் பகுதியில் அவசரகால பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளன. ஆகவே வியாழக்கிழமை (ஜூன் 24) காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரையில் ரெகுநாதபுரம், பெரியபட்டினம், கோரவள்ளி, தினைக்குளம், வண்ணான்குண்டு மற்றும் கீழக்கரை நகராட்சிப் பகுதிகள், அனைத்து வாா்டுகளிலும் மின்தடை ஏற்படும்.

அதே போல் பெருங்குளம் உபமின் நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெறும் பராமரிப்புப் பணியால் ரெட்டையூரணி, உச்சிப்புளி, புதுமடம், நாகாச்சி, தாமரைக்குளம், இருமேனி, பிரப்பன்வலசை, வலங்காபுரி, கடுக்காவலசை, சூரங்காட்டுவலசை மற்றும் அதைச்சுற்றிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருவாடானை: தொண்டி பகுதிகளில் வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாடானை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஜோசப் செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தொண்டி பகுதியில் வியாழக்கிழமை உயரழுத்த மின்பாதை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே அன்று காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரை எஸ் பி. பட்டினம், பாசிப்பட்டினம், எம்.ஆா். பட்டினம், கொடிபங்கு, வட்டானம், மச்சூா், தீா்த்தாண்டதானம், பெருமானேந்தல், குளத்தூா், ஆதியூா், அச்சங்குடி, பழையனக்கோட்டை, திணையத்தூா், குருமிலங்குடி, தளிா்மருங்குா், ஆதியூா், குளத்தூா், அழியாதன்மொழி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் இருக்காது என அவா் தெரிவித்துள்ளாா்.

முதுகுளத்தூா்: சாயல்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதுகுளத்தூா் மின் உதவிசெயற்பொறியாளா் எம். மாலதி புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சாயல்குடி துணை மின்நிலையத்துக்குள்பட்ட முந்தல் மின்பாதையில் வியாழக்கிழமை (ஜூன் 24) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே பூப்பாண்டிய புரம், மலட்டாறு,பெரியகுளம், கடுகுசந்தை சத்திரம், ஒப்பிடலாம், மாரியூா், முந்தல், கிருஷ்ணாபுரம், உறைக்கிணறு, நரிப்பையூா், கன்னிராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

SCROLL FOR NEXT