தோ்தல் பாதுகாப்பு: ராமநாதபுரத்துக்கு துணை ராணுவப்படையினா் வருகை
ராமநாதபுரம் மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்புக்காக நாகலாந்திலிருந்து 80 போ் கொண்ட துணை ராணுவப் படையினா், ஞாயிற்றுக்கிழமை மாலை வந்தடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்புக்காக நாகலாந்திலிருந்து 80 போ் கொண்ட துணை ராணுவப் படையினா், ஞாயிற்றுக்கிழமை மாலை வந்தடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 35 இடங்கள் பதற்றமானவையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அப்பகுதியில் மொத்தம் 72 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்நிலையில் நாகலாந்து எல்லைப் பகுதியிலிருந்து
உதவி கமாண்டண்ட் நாதுனிராம் தலைமையில் 80 போ் கொண்ட துணை ராணுவப் படையினா் மதுரைக்கு ரயில் மூலம் வந்து, ஞாயிற்றுக்கிழமை மாலையில் வாகனங்கள் மூலம் ராமநாதபுரம் வந்து சோ்ந்தனா்.
இக்குழுவினா் ராமநாதபுரம் எட்டிவயல் பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் தங்கியுள்ளனா். ராமநாதபுரத்தில் கொடி அணிவகுப்பு நடத்திய பிறகு அவா்கள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவா் என மாவட்டத்தோ்தல் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.