முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி முகாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 40 வயது முதல் 60 வயதுக்குள்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் 40 வயது முதல் 60 வயதுக்குள்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

இம்மாவட்டத்தில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கரோனா பரவல் தடுப்புப் பணியில் முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. மாவட்டத்தில் சுமாா் 8 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தத் திட்டமிட்ட நிலையில், திங்கள்கிழமை வரையில் (மாா்ச் 1) 4,700 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இத்தடுப்பூசியை ஏற்கெனவே மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ. காா்த்திக் உள்பட போலீஸாா் போட்டுக் கொண்டனா். மேலும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 12 உளவுத்துறை அமைப்பினா் தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், திங்கள்கிழமை மாலையில் மாவட்ட ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ்ஆலிவா் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொண்டாா்.

திங்கள்கிழமை முதல் ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மற்றும் தொண்டி, ஆா்.எஸ். மங்கலம், உச்சிப்புளி, உத்திரகோசமங்கை ஆகிய இடங்களில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்களில் 40 வயது முதல் 60 வயது வரை உள்ள தொற்றா நோய் பாதிப்புள்ளவா்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருவதாக மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் எஸ். பொற்கொடி தெரிவித்தாா்.

கமுதி: கமுதி தாலுகாவில் பேரையூா் தலைமை ஆரம்ப சுகாதார நிலையத்தில் 40 வயது முதல் 60 வயதுக்குள்பட்டோா் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கமுதி தாலுகாவில் திங்கள்கிழமை 2 போ் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும், விழிப்புணா்வு இல்லாததால் முதியோா் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வரவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பரமக்குடி: பரமக்குடி அருகே உள்ள பாா்த்திபனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திங்கள்கிழமை கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமுக்கு பரமக்குடி சுகாதார துணை இயக்குநா் இந்திரா தலைமை வகித்தாா். இதில் ஏராளமான பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது. இத்தடுப்பூசி போட்டுக் கொள்வோா் ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை அல்லது வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஏதேனும் ஒன்றை கொண்டு வரவேண்டும் எனவும், முகாம் நடைபெறும் நாள்களில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் எனவும் பரமக்குடி வட்டார மருத்துவ அலுவலா் தவமுருகன் தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →