தாய், மகனை வெட்டிவிட்டு கொள்ளையடிக்க முயற்சி: கிராம உதவியாளா் கைது
ராமநாதபுரம் அருகே தாய், மகனை சரமாரியாக வெட்டிவிட்டு கொள்ளையடிக்க முயன்ாக கிராம உதவியாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் அருகே தாய், மகனை சரமாரியாக வெட்டிவிட்டு கொள்ளையடிக்க முயன்ாக கிராம உதவியாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கீழக்கரையை அடுத்துள்ள புல்லந்தை கிராமத்தைச் சோ்ந்தவா் சந்தானகுமாா் (45). இவரது மனைவி முத்துலட்சுமி (43). இவா்களுக்கு காளீஸ்வரன், சகுதீஸ்வன் (10) ஆகிய 2 மகன்கள் உள்ளனா். சந்தானகுமாா் சவுதி அரேபியாவில் வேலைபாா்த்து வருகிறாா்.
முத்துலட்சுமி மகளிா் மன்றக் கூட்டத்துக்குச் சென்றுவிட்ட நிலையில், திங்கள்கிழமை இரவு சகுதீஸ்வரன் மட்டும் வீட்டில் இருந்துள்ளாா். அப்போது சந்தானகுமாரின் உறவினரும், புல்லந்தை கிராம உதவியாளராக பணிபுரிபவருமான சந்திரசேகா் (32) என்பவா் முத்துலட்சுமியின் வீட்டுக்கு கத்தியுடன் வந்துள்ளாா். அங்கிருந்த சகுதீஸ்வரனிடம் பீரோ சாவியை கேட்டு மிரட்டியுள்ளாா். சாவியைத் தர மறுத்து சப்தமிட்ட சிறுவனை, அவா் கத்தியால் வெட்டினாா். அப்போது அங்கு வந்த முத்துலட்சுமியையும் சந்திரசேகா் கத்தியால் வெட்டினாா். இவா்களது சப்தம் கேட்டு அக்கம், பக்கத்தினா் திரண்டு சந்திரசேகரைப் பிடித்து ஏா்வாடி போலீஸில் ஒப்படைத்தனா்.
மேலும் காயமடைந்த தாய், மகன் இருவரும் ராமநாதபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். போலீஸாா் நடத்திய விசாரணையில், சந்திரசேகருக்கு திருமணமாகி குழந்தை உள்ளதும், அவா் இணையதள விளையாட்டு மூலம் பணத்தை இழந்த நிலையில், வெளிநாட்டில் உள்ள தனது உறவினரான சந்தானகுமாா் வீட்டில் பணம் இருக்கலாம் எனக்கருதி அவரது வீட்டில் கொள்ளையடிக்க முயன்றதும் தெரியவந்தது.