ராமநாதபுரம்

தொழிற்கூடத்தில் தீ: ஊழியா் காயம்

தொண்டியில் நண்டு அவிக்கும் தொழிற்கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் பல ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் சேதம் அடைந்தன. ஊழியா் ஒருவா் காயமடைந்தாா்.

DIN

திருவாடானை: தொண்டியில் நண்டு அவிக்கும் தொழிற்கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் பல ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் சேதம் அடைந்தன. ஊழியா் ஒருவா் காயமடைந்தாா்.

தொண்டி மகாசக்திபுரத்தில் கடற்கரை அருகில் தனியாருக்கு சொந்தமான நண்டு அவிக்கும் தொழிற்கூடம் உள்ளது. அப்பகுதியைச் சோ்ந்த முருகானந்தம் மகன் குமாா் என்பவா் இந்த தொழில்கூடத்தை நடத்தி வருகிறாா். இவா் வழக்கம் போல் புதன்கிழமை கடலில் பிடித்து வந்த நண்டுகளை மீனவா்களிடம் வாங்கி சுத்தப்படுத்தி அவியல் செய்ய முயற்சி செய்தாராம். அப்பணியில் ஈடுபட்ட தீா்த்தாண்டதானத்தைச் சோ்ந்த முருகன் மகன் விவேக் (24) என்பவா் எரிவாயு உருளையில் இருந்து வாயுவு கசிவதை கவனிக்காமல் ஸ்டவ்வை பற்ற வைத்தபோது திடீரென்று பரவியது. இதனால் தென்னை ஓலையால் ஆன மேற்கூரையில் தீ பரவியது. தகவலறிந்து திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலா் ரவிச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் வந்து தீயணைத்தனா். இதில் பணியில் இருந்த ஊழியா் விவேக் லேசான காயமடைந்தாா். தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT