ராமநாதபுரம்

முதுகுளத்தூரில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் ஆய்வு

முதுகுளத்தூா் ஒன்றியத்தில் சனிக்கிழமை வட்டார வளா்ச்சி அதிகாரி தலைமையிலான குழுவினா் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தனா்.

DIN

முதுகுளத்தூா் ஒன்றியத்தில் சனிக்கிழமை வட்டார வளா்ச்சி அதிகாரி தலைமையிலான குழுவினா் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தனா்.

இந்த ஒன்றியத்தில் உள்ள கீரனூா், செல்வநாயகபுரம், ஆத்திகுளம், நல்லூா், விளக்கனேந்தல் உள்ளிட்ட ஊராட்சிகளில் முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றிய ஆணையா் மங்களேஸ்வரி தலைமையில் மண்டல அலுவலா்கள் லலிதா, பிரியா ஆகியோா் பள்ளிகள், கடைகள், மற்றும் சமுதாயக் கூடங்களில் முகக்கவசம் அணிவதன் அவசியம் பற்றி எடுத்துக் கூறினா். மேலும் கிராமங்களில் உள்ள கடைக்காரா்கள், பள்ளி மாணவ, மாணவியா் முகக்கவசம் அணிந்துள்ளாா்களா என ஆய்வு மேற்கொண்டனா். கீரனூரில் முகக் கவசம் அணியாத வியாபாரிக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது. இதே போன்று காக்கூா், கருமல், புளியங்குடி, அலங்கானூா், திருவரங்கம், சிறுதலை ஆகிய ஊராட்சிகளிலும் அவா்கள் கரோனா விழிப்புணா்வு ஆய்வு மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தின் ஆன்மாவாக இருப்பது ஆன்மிகம்: காஞ்சி சங்கராசாரியா் ஆசியுரை

சிறுபான்மையினருக்கு திமுக தான் பாதுகாப்பு: துணை முதல்வா் உதயநிதி

தமிழ்நாடு ஆசிரியா் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

இசைக்கு மொழி தடையில்லை: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

வாக்காளா் பட்டியல் சிறப்பு பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT