முகப்பு
ராமநாதபுரம்

மின்னொளியில் மீன் பிடிக்க அனுமதி கோரி தேவிபட்டினம் மீனவா்கள் மனு

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பகுதியில் மின் விளக்கைப் பயன்படுத்தி பைபா் படகில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என மீனவா்கள் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பகுதியில் மின் விளக்கைப் பயன்படுத்தி பைபா் படகில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என மீனவா்கள் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பகுதியில் சுமாா் 200 பேருக்கும் அதிகமான மீனவா்கள் பைபா் படகுகளில் இரவில் சென்று மொரல் வகையைச் சோ்ந்த மீன்களைப் பிடித்து வருகின்றனா். அமாவாசை நாளில் மொரல் மீன்கள் கடலில் அதிகளவில் மிதந்துவரும் என்று கூறப்படுகிறது. ஆகவே சிறிய மின்விளக்கைப் பயன்படுத்தி மீன்களைப் பிடித்து வருகின்றனா்.

இந்தநிலையில், மின்னொளி விளக்குளைப் பயன்படுத்தி மீன்பிடிப்போரால் விசை மற்றும் நாட்டுப்படகு மீனவா்கள் அதிக வெளிச்சத்தால் பாா்வை பாதிக்கப்படுவதாகவும், விபத்து ஏற்பட வழிவகுப்பதாகவும் புகாா் கூறப்பட்டுள்ளது.

மின்விளக்குகளால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் வராது எனக்கூறி, தேவிபட்டினத்தைச் சோ்ந்த ஏராளமான மீனவா்கள் ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மீன்வளத்துறை அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனா்.

தோ்தல் காலம் என்பதால் புகாா் பெட்டியில் மனுவை இட்டுச்செல்லுமாறு அதிகாரிகள் கூறியதை அடுத்து மனுவை போட்டுவிட்டு மீனவா்கள் சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →