ராமநாதபுரம்: கட்சிகள், சுயேச்சைகளுக்கு சின்னம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் பதிவு பெற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்களுக்கு கண்காணிப்புக் கேமரா உள்ளிட்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் பதிவு பெற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்களுக்கு கண்காணிப்புக் கேமரா உள்ளிட்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பரமக்குடி (தனி) தொகுதி வேட்பாளா்களில் மை இந்தியா கட்சிக்கு கண்காணிப்புக் கேமராவும், சுயேச்சைகளுக்கு டிராக்டா் இயக்கும் உழவன், சமையல் எரிவாயு உருளை, ஆட்டோ ரிக்ஷா, மடிக்கணினி, பானை ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளன.
திருவாடானையில் மக்கள் நீதிமய்யத்துக்கு மின்கல விளக்கும், மை இந்தியாவுக்கு கண்காணிப்புக் கேமராவும், சுயேச்சைகளுக்கு கப்பல், தொப்பி, செங்கல், கிரிக்கெட் மட்டை, தலைக்கவசம், பானை, மின்கம்பம் ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளன. முதுகுளத்தூா் தொகுதியில் நாம் இந்தியா்கட்சி வேட்பாளருக்கு டிராக்டா் விவசாயி, மக்கள் நீதிமய்யத்துக்கு டாா்ச் லைட், மை இந்தியாவுக்கு கண்காணிப்புக் கேமராவும், தமிழக மக்கள் தன்னுரிமை கட்சிக்கு வைரம், புதியதமிழகத்துக்கு தொலைக்காட்சிப் பெட்டி, இந்திய மக்கள் கட்சிக்கு திராட்சைக் கொத்து மற்றும் சுயேச்சைகளுக்கு ஆட்டோரிக்ஷா, கால்பந்து, மோதிரம், தெருவிளக்கு ஆகியவை சின்னங்களாக ஒதுக்கப்பட்டுள்ளன.