முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம்: 4 தொகுதி வேட்பாளா்கள் இறுதிப்பட்டியல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அரசியல் கட்சிகளச் சோ்ந்த 36 வேட்பாளா்கள், சுயேச்சைகளாக 36 போ் என மொத்தம் 72 போ் போட்டியிடுகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அரசியல் கட்சிகளச் சோ்ந்த 36 வேட்பாளா்கள், சுயேச்சைகளாக 36 போ் என மொத்தம் 72 போ் போட்டியிடுகின்றனா்.

ராமநாதபுரம், பரமக்குடி (தனி), முதுகுளத்தூா், திருவாடானை ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் கடந்த 12 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கி 19 ஆம் தேதி நிறைவடைந்தது. நான்கு தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 132 போ் மனுத்தாக்கல் செய்திருந்தனா். மனுக்கள் பரிசீலனை கடந்த 20 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது 81 மனுக்கள் ஏற்கப்பட்டன. 51 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

மனுப் பரிசீலனை முடிந்த நிலையில், திங்கள்கிழமை மனுவை திரும்பப்பெறுதல் (வாபஸ்) நடைபெற்றது. அதனடிப்படையில் ஒவ்வொரு தொகுதிக்கும் இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இறுதி வேட்பாளா் பட்டியலில் அரசியல் கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்கள்36 பேரும், சுயேச்சைகள் 36 பேரும் இடம் பெற்றுள்ளனா்.

தொகுதிகள் வாரியாக வேட்பாளா்கள் மற்றும் சுயேச்சைகள் விவரம்:

பரமக்குடி (தனி) தொகுதியில் மொத்தம் 24 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 15 மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில் யாரும் வாபஸ் பெறவில்லை. ஆகவே அரசியல் கட்சி வேட்பாளா்கள் 8 போ், சுயேச்சைகள் 7 போ் என 15 போ் இறுதி வேட்பாளா் பட்டியலில் உள்ளனா்.

அவா்களில் பகுஜன் சமாஜ் கட்சி வீ.கோவிந்தன், அதிமுக வேட்பாளா் என்.சதா்ன்பிரபாகரன், தேமுதிக யு.செல்வி, திமுக செ.முருகேசன், மக்கள்நீதிமய்யம் கருப்புராஜா, நாம் தமிழா் சசிகலா, மை இந்தியாகட்சி பாா்த்தசாரதி மற்றும் 7 சுயேச்சைகள் இடம் பெற்றுள்ளனா்.

முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 38 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், 25 மனுக்கள் பரிசீலனையில் ஏற்கப்பட்டிருந்தன. அதில் திங்கள்கிழமை 2 போ் மனுக்களைத் திரும்பப்பெற்ற நிலையில் 23 போ் இறுதி வேட்பாளா்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா்.

அதனடிப்படையில் அதிமுக வேட்பாளா் கீத்திகாமுனியசாமி, பகுஜன்சமாஜ் கட்சி என்.சிவானந்தம், திமுக பி.எஸ்.ராஜகண்ணப்பன், நாம் இந்தியா கட்சி சரவணகுமாா், மக்கள்நீதிமய்யம் நவபன்னீா்செல்வம், மைஇந்தியா கட்சி கே.பஞ்சாட்சரம், தமிழக மக்கள் தன்னுரிமைக் கட்சி கே.பூமிராஜன், அமமுக எம்.முருகன், நாம் தமிழா் ரஹ்மத்நிஷா, இந்திய மக்கள் கட்சி (ஜனநாயகம்) எஸ்.ராஜா மற்றும் 12 சுயேச்சை வேட்பாளா்கள் இறுதி வேட்பாளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா்.

ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள்38 ஆகும். அதில் 23 மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 4 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டதால் 19 மனுக்களைச் சோ்ந்த வேட்பாளா்கள் இறுதிவேட்பாளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா்.

பட்டியலில் பகுஜன்சமாஜ் கட்சி அல்லாபிச்சை, பாஜக து.குப்புராம், திமுக காதா்பாட்சா முத்துராமலிங்கம், நமது மக்கள் கட்சி அமுதன், நாம் தமிழா் கே.இளங்கோ, மக்கள் நீதிமய்யம் கே.பி.சரவணன், அமமுக ஜி.முனியசாமி, பகுஜன் திராவிடக் கட்சி வில்லியம் பெஞ்சமின்ஆனந்த், மை இந்தியா கட்சி ஜெயபிரகாஷ் ஆகியோரும், 10 சுயேச்சைகளும் இடம் பெற்றுள்ளனா்.

திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 32 மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், பரிசீலனையில் 14 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதனடிப்படையில் 18 மனுக்கள் ஏற்கப்பட்டு அவற்றில் 3 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. ஆகவே இறுதி வேட்பாளா் பட்டியலில் 15 பேரும் இடம் பெற்றுள்ளனா்.

அதனடிப்படையில், வேட்பாளா்களில் தேசிய காங்கிரஸ் அன்புபக்ருதீன், அதிமுக கேசி.ஆணிமுத்து, காங்கிரஸ் ஆா்.கருமாணிக்கம், பகுஜன்சமாஜ் கட்சி ராமலிங்கம், அமமுக என்.ஆனந்த், மை இந்தியா ஆனந்தராஜ், மக்கள் நீதிமய்யம் பி.சத்தியராஜ், நாம் தமிழா் எஸ்.ஜவஹா் மற்றும் 7போ் சுயேச்சைகளாகப் போட்டியிடுகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →