முகப்பு
ராமநாதபுரம்

பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக பாம்பன் துறைமுகத்தில் புதன்கிழமை இரவு ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

Updated On : 12 நவம்பர், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 10:03 AM

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக பாம்பன் துறைமுகத்தில் புதன்கிழமை இரவு ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக வங்கக்கடலில் அலை சீற்றத்துடன் காணப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்ட மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு புதன்கிழமை இரவு ஏற்றப்பட்டது.

இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதியில் விசைப்படகு மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினா் தடை விதித்துள்ளனா். இதன்காரணமாக சுமாா் 1,700-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் அந்தந்தத் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக மீனவா்கள் தொடா்ந்து மீன்பிடிக்கச் செல்லாததால் மீன்பிடித் தொழில் முடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.