தொண்டியில் அழகப்பா பல்கலைகக்கழக கடலோரபியல் கல்லூரி மாணவ மாணவிகள் கடலோர தூய்மைப்படுத்தும் தின விழிப்புணர்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. 
ராமநாதபுரம்

தொண்டியில் சர்வதேச கடலோர தூய்மைப்படுத்தும் நாள் விழிப்புணர்வு பேரணி

திருவாடானை அருகே தொண்டியில் அழகப்பா பல்கலைக்கழகம் கடலோரவியல் கல்லூரி தொண்டி மற்றும் தேசிய மத்திய கடல் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து விழிப்புணர்வு பேரணி

DIN

திருவாடானை அருகே தொண்டியில் அழகப்பா பல்கலைக்கழகம் கடலோரவியல் கல்லூரி தொண்டி மற்றும் தேசிய மத்திய கடல் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து விழிப்புணர்வு பேரணி மற்றும் கடற்கரை தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டனர்.

திருவாடானை அருகே தொண்டியில் அழகப்பா பல்கலைக்கழகம் கடலோரவியல் கல்லூரி தொண்டி மற்றும் தேசிய மத்திய கடல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து கடலோர தூய்மைப்படுத்தும் நாளாக அழகப்பா பல்கலைக்கழக கடலோரவியல் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அழகப்பா பல்கலைக்கழகம் துணை வேந்தர் சாமிநாதன் (பொ)தலைமை வகித்தார். 

பதிவாளர் சேகர் கடலோரவியல் துறை தலைவி ஸ்டெல்லா, தொண்டி இஸ்லாம் மாடல் மேல்நிலைப்பள்ளி தலைவர் பொறியாளர் அபூபக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அழகப்பா பல்கலைக்கழகம் கடலோரவியல் கல்லூரி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு தொண்டி அழகப்பா பல்கலைக்கழகம் வந்தடைந்தது. 

அதனைத் தொடர்ந்து தொண்டி கடற்கரை பகுதியை தூய்மைப்படுத்தும் பணியில் அழகப்பா பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் கலந்துகொண்டு பணியினை செய்தனர். இதில் கடலோர காவல் துறை ஆய்வாளர் சார்பு ஆய்வாளர்ராஜ்குமார் சார்பு ஆய்வாளர் மாணிக்கம் மற்றும் காவல்துறையினர் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கப்பூரில் 20 ஆயிரம் அடிகள்... அங்கிதா சர்மா!

கலைகளிலே அவள் ஓவியம்... சஞ்சனா திவாரி!

ஹேப்பி பர்த் டே... குஷி கபூர்!

15 பாலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்த இஸ்ரேல்! எண்ணிக்கை 285 ஆக அதிகரிப்பு!

அரசன் தரமாக இருக்கும்: கவின்

SCROLL FOR NEXT