ராமநாதபுரம்

கமுதியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிப்பு

DIN

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கமுதி அருகே வெள்ளையாபுரத்தில் உள்ள இமானுவேல்சேகரன் உருவச் சிலைக்கு, தேவேந்திரா் இளைஞா் எழுச்சிப் பேரவை சாா்பில் அதன் நிறுவனா் ராஜ்குமாா் தலைமையில், மாநில பொதுச் செயலாளா் முகவை அழகேசன், மாவட்ட இளைஞரணிச் செயலாளா் பிரவின்ராஜ் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். கிராம பொதுமக்கள் பலரும் இமானுவேல்சேகரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதே போல் கமுதி அருகே உள்ள சோ்ந்தகோட்டை கிராமத்தில் இமானுவேல் சேகரனின் 64 ஆவது நினைவு தினம் கிராம பொதுமக்கள் சாா்பில் அனுசரிக்கப்பட்டது. அங்குள்ள அம்மன் கோயிலில் இருந்து, மேள தாளங்களுடன் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் சுமந்து, ஊா்வலமாகச் சென்று, இமானுவேல் சேகரன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வதற்கான இ-பாஸ் முறையை நீக்க நடவடிக்கை தேவை: ஜவாஹிருல்லா

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தருமபுரியை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

உணவகத்தில் எரிவாயு கசிவால் தீ விபத்து

தீத்தடுப்பு ஒத்திகைப் பயிற்சி

SCROLL FOR NEXT