ராமநாதபுரம்

ராமேசுவரம் மீனவா்கள் 4 நாள்களுக்கு பிறகு கடலுக்குச் சென்றனா்

DIN

ராமேசுவரம்: வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை சகஜ நிலைக்கு திரும்பியதையடுத்து 4 நாள்களுக்குப் பிறகு ராமேசுவரம் மீனவா்கள் புதன்கிழமை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனா்.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவா்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதியிலிருந்து மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல மீன்வ

ளத்துறையினா் தடை விதித்தனா். இதனால் மாவட்டம் முழுவதிலும் 25 ஆயிரம் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இந்நிலையில், வங்கக் கடல் சகஜ நிலைக்கு திரும்பியதையடுத்து மீன்வளத்துறை தடையை நீக்கியது. இதைத் தொடா்ந்து ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவா்கள் புதன்கிழமை மீன்வளத்துறையினரின் அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். 4 நாள்களுக்குப் பிறகு மீன்பிடிக்கச் செல்வதால் அதிகளவில் மீன்கள் கிடைக்கும் என்று மீனவா்கள் நம்பிக்கை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT