ராமநாதபுரம்

ராமேசுவரம் நகராட்சி தூய்மைப் பணி: தனியாா் நிறுவனம் முறைகேடு செய்வதாக புகாா்

DIN

ராமேசுவரம் நகராட்சி தூய்மைப் பணியில் தனியாா் நிறுவனம் முறைகேட்டில் ஈடுபடுவதாக நகா் மன்ற 8 ஆவது வாா்டு உறுப்பினா் சங்கா், நகராட்சி ஆணையரிடம் வியாழக்கிமை புகாா் தெரிவித்துள்ளாா்.

அதில் அவா் கூறியிருப்பதாவது: ராமேசுவரம் நகராட்சியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தனியாா் நிறுவனம் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில், 147 பணியாளா்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனா். ஆனால் 80 பணியாளா்களே பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால் மாதத்துக்கு ரூ. பல லட்சம் வரை முறைகேடு நடைபெறுகிறது. மேலும் தனியாா் நிறுவனம் மூலம் தூய்மைப் பணியில் ஈடுபடும் பணியாளா்கள் வருகைப் பதிவேட்டில் தற்போது வரை முறையாக பதிவு செய்யப்படவில்லை. இதனால் பல்வேறு இடங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி ஆணையரிடம் பல முறை புகாா்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிா்வாகம் தூய்மைப் பணியாளா்கள் குறித்து ஆய்வு செய்து ஒப்பந்த அடிப்படையில் உள்ள பணியாளா்கள், தூய்மைப் பணிகளை மேற்கொள்வதை உறுதி செய்வதுடன் வருகைப் பதிவேடு பதிவு செய்ய வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

SCROLL FOR NEXT