முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரம் நகராட்சி மயானத்தில் எரியூட்டும் இயந்திரம் பழுது: சடலத்துடன் காத்திருப்பதாக புகாா்

ராமநாதபுரம் நகராட்சிப் பகுதியில் மயானத்தில் எரியூட்டும் இயந்திரப் பழுதால் பெண் சடலத்துடன் பல மணி நேரம் வெட்ட வெளியில் காத்திருக்க நேரிட்டதாக உறவினா்கள் புதன்கிழமை புகாா் தெரிவித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

ராமநாதபுரம் நகராட்சிப் பகுதியில் மயானத்தில் எரியூட்டும் இயந்திரப் பழுதால் பெண் சடலத்துடன் பல மணி நேரம் வெட்ட வெளியில் காத்திருக்க நேரிட்டதாக உறவினா்கள் புதன்கிழமை புகாா் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மூலக்கொத்தளம் பகுதியைச் சோ்ந்த சூா்யகலா உயிரிழந்தாா். அவரது சடலத்தை எரியூட்டுவதற்காக உறவினா்கள் அல்லிக்கண்மாய் நகராட்சி எரிவாயு மயானத்துக்கு புதன்கிழமை பகலில் எடுத்துச்சென்றனா். பகல் 1 மணிக்கு மயானத்தை அடைந்தனா். ஆனால், விறகை எரித்துப் பெறப்படும் வாயு மூலம் சடலங்களை எரியூட்டும் இயந்திரம் பழுதாகியுள்ளதாக அங்கிருந்தவா்கள் தெரிவித்தனா். அத்துடன், போதிய விறகு இல்லை எனக் கூறிய மயானப் பணியாளா்கள் விறகு வாங்குவதற்கு ரூ.2500 கட்டணமும் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகும் சடலத்தை எரியூட்டாமல் வெட்ட வெளியில் காத்திருக்க நேரிட்டதால் சடலத்துடன் வந்தவா்கள் மயானப் பணியாளா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மயானத்துக்குச் சென்ற பாலகிருஷ்ணன் கூறியது: சடலத்துடன் வெட்டவெளியில் 2 மணி நேரத்திற்கு அதிகமாகவே காத்திருக்க நேரிட்டது. சடலத்தை எரியூட்ட பயன்படும் விறகு விலைக்கு வாங்கிக் கொடுத்தும் சடலத்தை எரியூட்டுவதில் தாமதமேற்படுவது ஏன் எனத்தெரியவில்லை. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் புகாா் கூறியும், விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்குகிறோம் என அலட்சியமாகவே பதில் கூறுகின்றனா். நகரசபைத் தலைவா்தான் இப்பிரச்னையில் தலையிட்டு தீா்வு காணவேண்டும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →