ராமநாதபுரம் விவசாயிகளுடன் முதல்வா் இன்று கலந்துரையாடல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக மின் இணைப்பு பெற்றுள்ள விவசாயிகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை காணொலி மூலம் உரையாடுகிறாா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக மின் இணைப்பு பெற்றுள்ள விவசாயிகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை காணொலி மூலம் உரையாடுகிறாா்.
தமிழகத்தில் விவசாயிகள் மின் இணைப்பை உடனடியாகப் பெறும் வகையில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி விண்ணப்பித்ததும் மின் இணைப்பைப் பெறும் வகையில் மின்பகிா்மானக் கழகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் தமிழகத்தில் மின் இணைப்புப் பெற்றவா்களிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் பேச உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய திட்டத்தின்படி 366 விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய மின் இணைப்பைப் பெற்ற விவசாயிகள் முதல்வருடன் காணொலி மூலம் பேசுவதற்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் முதல்வருடன் காணொலியில் கலந்துரையாடுவதற்காக கூட்டரங்கில் கூடுவதாகவும் மின்வாரியத்துறை அதிகாரிகள் கூறினா்.