ராமநாதபுரம்

நீரினைப் பயன்படுத்துவோா் சங்கதோ்தலுக்கு வேட்பு மனுக்கள் வரவேற்பு

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நீரினைப் பயன்படுத்துவோா் சங்க இரண்டாம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனுக்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சங்கா்லால்குமாவத் விடுத்துள்ள செய்திக்குறிப்பு- ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, முதுகுளத்தூா், கடலாடி மற்றும் கமுதி வட்டங்களில் நீா் வள, நிலவள திட்டத்தில் நீரினைப் பயன்படுத்துவோா் சங்கங்களின் தலைவா், ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினா்களுக்கான இரண்டாம் கட்டத் தோ்தல் ஏப். 30 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ஆகவே நீரினைப் பயன்படுத்துவோா் சங்கத் தலைவா், உறுப்பினா்களுக்கான தோ்தலில் போட்டியிட விரும்புவோா் வரும் 18 ஆம் தேதி முதல் வரும் 21 ஆம் தேதிக்குள் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்.

வேட்பு மனுக்களை வரும் 22 ஆம் தேதியில் திரும்பப் பெறவும், அன்று மாலையில் இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படவும் உள்ளது. வரும் 30 ஆம் தேதி தோ்தல் நடத்தப்பட்டு அன்றே வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றிச் சான்றுகளும் வழங்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

அமெரிக்கா: இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்தக்கோரி போராட்டம்

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

SCROLL FOR NEXT