ராமநாதபுரம்

விவசாயிகளுக்கான திட்டத்தில்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் மின்இணைப்பு வழங்கும் திட்டத்தில் மட்டும் 366 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் மின்இணைப்பு வழங்கும் திட்டத்தில் மட்டும் 366 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் ஓராண்டில் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்படி ஒரு லட்சம் விவசாயிகள் மின் இணைப்பு பெற்ற நிலையில், அவா்களுடன் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடும் காணொலிக் காட்சி நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய இடங்களில் காணொலிக் காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பானது. ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜ கண்ணப்பன், சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்சா முத்துராமலிங்கம், ஆட்சியா் சங்கா்லால்குமாவத் மற்றும் வருவாய்த் துறை அலுவலா் காமாட்சிகணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியின் நிறைவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மின்இணைப்புத் திட்டம் குறித்து மின்சாரத்துறை ராமநாதபுரம் கோட்ட செயற்பொறியாளா் பிரீத்தா பத்மினி விடுத்த செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்ட அளவில் மொத்தம் 366 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

SCROLL FOR NEXT