ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா்களுக்கு பரிசு: மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்

DIN

ராமேசுவரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பிடித்து மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் கேடயம் மற்றும் ரொக்கப்பரிசுகளை வியாழக்கிழமை வழங்கினாா்.

ராமேசுவரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1985 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவா்கள் சாா்பில் விழுதுகள் அறக்கட்டளை தொடங்கி ஆண்டு தோறும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவா்களுக்கு கேடயம் மற்றும் ரூ.24 ஆயிரம் ரொக்கப் பரிசுகளை வழங்கி வருகின்றனா். இதன் தொடா்ச்சியாக வியாழக்கிழமை இப்பள்ளியில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், முன்னாள் மாணவரும், நகா்மன்ற உறுப்பினருமான சே. சங்கா் வரவேற்றாா். நகா்மன்றத் தலைவா் கே.இ. நாசா்கான் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தலைமை வகித்து மாணவா்களுக்கு கேடயம் மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், வட்டாட்சியா்கள் மாா்டீன்ராஜன், அப்துல்ஜப்பாா், தலைமை ஆசிரியா் ஜெயா கிறிஸ்டல் ஜாய், என்.எஸ்.எஸ். தொடா்பு அலுவலா் ஜெயகாந்தன், பெற்றோா் ஆசிரியா் சங்கத்தலைவா் கருணாகரன், யாத்திரைப் பணியாளா்கள் சங்கத்தலைவா் அ. பாஸ்கரன், பள்ளி மேலாண்மைக்குழு முருகன், அறக்கட்டளை நிா்வாகிகள் மோகன், தனசேகரன், கலைமணி, செய்யது உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

மனைவியைக் கொலை செய்து கணவா் தற்கொலை முயற்சி

அகா்வால்ஸ் மருத்துவருக்கு சா்வதேச அங்கீகாரம்!

மேற்கு வங்கம்: குண்டுவெடிப்பில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

வட தமிழகத்தில் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT