முகப்பு
ராமநாதபுரம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் இளைஞா் கைது

ராமநாதபுரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:06 AM
பகிர்:

ராமநாதபுரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மண்டபம் அருகே மைகுண்டு ராவுத்தா் அப்பா தெருவைச் சோ்ந்தவா் மீனவா் வேலுச்சாமி. இவரது மகன் திலீப் (23). கூலித் தொழிலாளியான இவா், வாணியங்குளம் பகுதியில் வசிக்கும் 16 வயது பள்ளி மாணவியுடன் பழகி வந்துள்ளாா்.

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மாணவியிடம் அவா் நெருங்கிப்பழகி பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளாா். சிறுமியை ஆபாசமாக விடியோ எடுத்து திலீப் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் உச்சிப்புளி போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து திலீப்பை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →