ராமநாதபுரம்

மக்கள் தொடா்பு திட்ட முகாமில் ரூ.4.26 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

DIN

கமுதி அருகே நகரத்தாா்குறிச்சியில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியா் ரா.முருகன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

கமுதி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் தமிழ்ச்செல்விபோஸ், ஊராட்சித் தலைவா் முத்துவிஜயன், கமுதி வட்டாட்சியா் சிக்கந்தா் பபிதா, பாப்பனம் ஊராட்சித் தலைவா் அமுதா காா்த்திகைசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில் மாற்றுத்திறனாளி உதவித்தொகை, ஆதரவற்றோா் விதவை உதவித்தொகை, முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா என மொத்தம் ரூ.4.26 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் எழுவனூா் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் ஈஸ்வரிமாரிமுத்து, மண்டல துணை வட்டாட்சியா் முத்துராமலிங்கம், வட்ட வழங்க அலுவலா் ராமசுப்பிரமணியன், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் அமலோா்பவ ஜெயராணி, துணை வட்டாட்சியா் சம்பத், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் சத்தியபாமா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

SCROLL FOR NEXT