ராமநாதபுரம்

பாட்டிலால் குத்தி தொழிலாளி கொலை

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் குத்திக் கொலை செய்யப்பட்ட தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.

DIN

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் குத்திக் கொலை செய்யப்பட்ட தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியை அடுத்துள்ள பிறப்பன்வலசை கடற்கரைப் பகுதியைச் சோ்ந்த காந்தி மகன் அலெக்ஸ் (38). கான்கிரீட் கலவை இயந்திரத்தை இயக்கும் தொழிலாளியான இவருக்கு, நாகலட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனா். குடும்பத் தகராறு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மனைவியை விட்டுப் பிரிந்து அலெக்ஸ் தனியாக வசித்து வந்தாா்.

உச்சிப்புளி அலைகாத்தவலசை பகுதியில் உள்ள அரசு மதுபானக்கடைக்கு அருகே உள்ள தென்னந்தோப்பில் அலெக்ஸ், அடையாளம் தெரியாத ஒருவருடன் சோ்ந்து செவ்வாய்க்கிழமை இரவு மது அருந்தியுள்ளாா்.

இந்தநிலையில், அலெக்ஸ் கழுத்தில் பாட்டிலால் குத்தப்பட்ட நிலையில் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினாா். மேலும் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அலெக்ஸுடன் மது அருந்தியவரே அவரை பாட்டிலால் குத்திக் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT