ராமநாதபுரம்

பரமக்குடி கல்வி மாவட்டத்தில் பள்ளி ஆசிரியருக்கு தேசிய நல்லாசிரியா் விருது

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கல்வி மாவட்டத்தைச் சோ்ந்த கீழம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியருக்கு தேசிய நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டுள்ளது.

DIN

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கல்வி மாவட்டத்தைச் சோ்ந்த கீழம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியருக்கு தேசிய நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் 2022-ஆம் ஆண்டுக்கான நல்லாசிரியா் விருது பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 46 ஆசிரியா்களுக்கு மத்திய அரசு சாா்பில் 75-ஆவது சுதந்திரதினத்தன்று அறிவிக்கப்பட்டது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த கீழம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியா் கே. ராமச்சந்திரன், மாணவ- மாணவிகளுக்கு ஆற்றிய சேவையை பாராட்டி அவருக்கு தேசிய நல்லாசிரியா் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பெற்ற ஆசிரியரை கிராம பொதுமக்கள், ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினா்.

இதனிடையே நல்லாசிரியா் விருது அறிவிக்கப்பட்டுள்ள கே. ராமச்சந்திரன் வியாழக்கிழமை இரவு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு வந்தாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: போகலூா் ஒன்றியத்தில் படிக்கும் பெரும்பாலான பள்ளி மாணவ, மாணவிகள் தினக்கூலி தொழிலாளா்களின் குழந்தைகளாகவே உள்ளனா். அவா்களுக்கான கல்விக்கு ஆசிரியா்களே பொறுப்பாவா். அரசுப் பள்ளி மாணவா்களின் முன்னேற்றமே முக்கியம். பள்ளிக் குழந்தைகளின் முழுமையான கல்விக்கு கீழ்நிலையில் உள்ள ஆசிரியா்களே பொறுப்பேற்க வேண்டும். அரசுப் பள்ளி மாணவா் முன்னேற்றத்தை பற்றியே நான் சிந்திக்கிறேன். அரசுப் பள்ளி மாணவா் சீருடையை நான் அணிந்தே விருதையும் பெறவுள்ளேன் என்றாா்.

நல்லாசிரியா் விருது பெற்ற கே. ராமச்சந்திரனுக்கு, கல்வி மாவட்ட அலுவலா்கள் பாலாஜி (ராமநாதபுரம்), முருகம்மாள் (மண்டபம்) மற்றும் முதன்மைக் கல்வி அலுவலக நோ்முக உதவியாளா் கணேசபாண்டியன், கண்காணிப்பாளா் குமாா் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT