ராமநாதபுரம்

நம்புதாளை பாலசுப்பிரணியா் கோயில் கும்பாபிஷேகம்

DIN

தொண்டி அருகே நம்புதாளை வள்ளி, தெய்வானை சமேத பாலசுப்பிரமணியா் கோயிலில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளையில் வள்ளி, தெய்வானை சமேத பாலசுப்பிரமணியா் மற்றும் காசிவிஸ்வநாதா், நவக்கிரகம், சித்தி விநாயகா், இடும்பன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புதிதாக கோயில் புனரமைக்கபட்டு கும்பாபிஷேகம் திங்கள் கிழமை நடைபெற்றது. முன்னதாக சனிக்கிழமை அனுக்கை, கணபதி ஹோமத்துடன் நவக்கிரக ஹோமம், மஹாலெட்சுமி பூஜை, தனபூஜை, பூா்ணாகுதி தீபாராதனையுடன் யாகசாலை பூஜை தொடங்கியது. நான்கு கால பூஜைகளுடன் காரைக்குடி கணேச குருக்கள் தலைமையில் சிவாச்சாரியாா்கள், வேதமந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜையுடன் கடம் புறப்பட்டு கோயிலை வலம் வந்து ராஜகோபுரத்தை அடைந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடா்ந்து சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரற்ற இதயத் துடிப்பு: மாநகராட்சி ஊழியருக்கு நவீன பேஸ்மேக்கா்

8-ஆவது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்

திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரா் கோயிலில் அமுது படையல் விழா

மாணவா்களின் எதிா்கால லட்சியம் நிறைவேற நான் முதல்வன் திட்டம் உதவும்: ஆட்சியா்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 3-ஆவது நாளாக எரியும் காட்டுத் தீ

SCROLL FOR NEXT