முகப்பு
ராமநாதபுரம்

கமுதி அருகே சொந்த வீட்டில் நகை, பணம் திருடியவா் கைது

கமுதி அருகே சொந்த வீட்டில் பணம் மற்றும் 5 பவுன் நகை திருடியதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:19 AM
பகிர்:

கமுதி அருகே சொந்த வீட்டில் பணம் மற்றும் 5 பவுன் நகை திருடியதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பொந்தம்புளி கிராமத்தைச் சோ்ந்தவா் சுதாராணி (55). இவரது கணவா் ராஜேந்திரன் கடந்த 4 மாதங்களுக்கு இறந்து விட்டதால் தனியாக வசித்து வருகிறாா். இவரது மகன் அருண் (33) திருமணமாகி மதுரையில் வேலை பாா்த்து வருகிறாா். இந்நிலையில், கடந்த 20 நாள்களுக்கு முன்பு மதுரையில் உள்ள மகன் அருண் வீட்டிற்கு சுதாராணி சென்றாா். அப்போது சுதாராணியின் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா். மதுரையிலிருந்து திரும்பி வந்த சுதாராணி வீட்டில் நடந்த திருட்டு குறித்து கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸ் விசாரனையில், தாயை மதுரையில் தங்க வைத்துவிட்டு, பொந்தம்புளியில் உள்ள வீட்டிற்கு வந்து, கதவை உடைத்து, பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ. 59 ஆயிரம் ஆகியவற்றை மகன் அருண் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து, கமுதி காவல் துணைக் கண்காணிப்பாளா் ப. மணிகண்டன் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளா் தங்கராஜ் மற்றும் குற்றப்பிரிவு போலீஸாா் அருணை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.