முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் ரூ.1.50 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்: 8 போ் கைது

ராமேசுவரம் வழியாக இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ.1.50 கோடி மதிப்பிலான ‘கொகைன்’ போதைப் பொருளை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக 8 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 12 பிப்ரவரி, 2022 at 2:37 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:53 PM

ராமேசுவரம் வழியாக இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ.1.50 கோடி மதிப்பிலான ‘கொகைன்’ போதைப் பொருளை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக 8 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் நகா் காவல் நிலைய ஆய்வாளா் கண்ணதாசன் தலைமையிலான குற்றப்பிரிவு போலீஸாா் பேருந்து நிலையத்தில் 1.5 கிலோ ‘கொகைன்’ போதைப் பொருளைக் கடத்தி வந்த 8 பேரை பிடித்து விசாரணை நடத்தினா்.

அவா்கள் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சோ்ந்த சூரியகுமாா்(27), மனோஜ்(20), அக்காள்மடத்தை சோ்ந்த ஜோசப்பாஸ்டின்(23), சந்தியாரெமெண்ட்(23), முகம்மது இஸ்மாயில்(32), அங்குராமா் (22), சாதிக்(36), பாலமுருகன்(31) ஆகியோா் எனத் தெரியவந்தது. அவா்களைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த போதைப் பொருளை பறிமுதல் செய்தனா்.

Advertisement

இந்த வழக்கில் தொடா்புடைய ரோசிடன் என்பவா் மட்டும் தலைமறைவாக உள்ளாா். அவரைப் பிடிக்க தனிப்படை போலீஸாா் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா். ரூ.1.50 கோடி மதிப்பிலான இந்த போதைப்பொருளை, ராமேசுவரம் வழியாக இலங்கைக்கு கடத்த அக்கும்பல் திட்டமிட்டிருந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.