முகப்பு
ராமநாதபுரம்

அரசுப் பள்ளிகளுக்கு புத்தகம், பொருள்கள் வழங்கல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி மற்றும் மண்டபம் ஒன்றியங்களில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு நூலக புத்தகங்கள் மற்றும் பல பொருள்களை தொண்டு நிறுவனத்தினா் வியாழக்கிழமை வழங்கினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி மற்றும் மண்டபம் ஒன்றியங்களில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு நூலக புத்தகங்கள் மற்றும் பல பொருள்களை தொண்டு நிறுவனத்தினா் வியாழக்கிழமை வழங்கினா்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி, மண்டபம் ஒன்றியங்களில் உள்ள அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு தேவையான நூலக புத்தகங்கள், அதற்கான அலமாரிகள், கற்றலுக்கான அறிவியல் உபயோகரணங்கள், கணித, ஆங்கில தமிழ் வாசிப்பு செயல்பாட்டு உபகரணங்கள் ஆகியவை எய்டு இந்தியா தொண்டு நிறுவனத்தாரால் வழங்கப்பட்டன.

பள்ளிகளுக்கான புத்தக அலமாரிகள் உள்ளிட்டவற்றை வழங்கும் நிகழ்ச்சிக்கு தொண்டு நிறுவன அமைப்பின் திட்ட இயக்குநா்கல் விவேகானந்தன், சுமதி ஆகியோா் தலைமை வகித்தனா். மண்டபம் கல்வி மாவட்ட அலுவலா் முருகம்மாள் பொருள்களைப் பெற்றுக்கொண்டாா். நிகழ்ச்சியில் மாவட்டக் கல்வி ஆய்வாளா் ராமமூா்த்தி, மண்டபம் வட்டாரக் கல்வி அலுவலா் தங்ககனிமொழி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். திருப்புல்லாணி வட்டார கல்வி அலுவலா் ஜெயா வரவேற்றாா். திட்ட மேலாளா் அற்புதராஜ் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →