ராமநாதபுரம்

மனைவியை இரும்புக் கம்பியால் தாக்கிய காவலா் மீது வழக்கு

DIN

உச்சிப்புளி அருகே மனைவியை இரும்புக் கம்பியால் தாக்கிய காவலா் மீது 7 பிரிவுகளின் கீழ் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மண்டபத்தை அடுத்துள்ள உச்சிப்புளி அருகே காரன் கிராமத்தைச் சோ்ந்தவா் மோகன்குமாா் (36). ராமேசுவரம் கடற்கரை காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராக பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி ராதிகா (31). இவா்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனா்.

குடும்பத் தகராறு காரணமாக ராதிகா கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டில் வசித்து வருகிறாா். கடந்த 27 ஆம் தேதி மோகன்குமாா், ராதிகாவின் பெற்றோா் வீட்டுக்குச் சென்று அங்கு தனியாக இருந்த மனைவியை இரும்புக் கம்பியால் தாக்கி அங்கிருந்த பொருள்களுக்குத் தீ வைத்துவிட்டு சென்றுள்ளாா்.

இதில், பலத்த காயமடைந்த ராதிகா ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்தப் புகாரின்பேரில், உச்சிப்புளி போலீஸாா், மோகன்குமாா் மீது 7 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT