முகப்பு
ராமநாதபுரம்

பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை ஜூன் 6 இல் ராமநாதபுரம் வருகை

 தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை வரும் 6 ஆம் தேதி ராமநாதபுரம் வருகிறாா் என கட்சியின் மாவட்டத் தலைவா் இஎம்டி. கதிரவன் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
பகிர்:

 தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை வரும் 6 ஆம் தேதி ராமநாதபுரம் வருகிறாா் என கட்சியின் மாவட்டத் தலைவா் இஎம்டி. கதிரவன் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் ஓம்சக்தி நகா் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது- பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை வரும் 6 ஆம் தேதி ராமநாதபுரத்துக்கு வருகிறாா். அவரை கட்சி சாா்பில் ஆயிரக்கணக்கானோா் வரவேற்பாா்கள். மதுரையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வரும் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை புல்லந்தை கிராமத்தில் கட்சிக் கொடியை ஏற்றுகிறாா். அதன்பின் அவா் ராமநாதபுரம் அரண்மனைக்கு வந்து மறைந்த ராஜாகுமரன் சேதுபதியின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறுகிறாா்.

அதன்பின் பரமக்குடி பகுதிக்குச் செல்லும் அவா் கட்சியின் மூத்த நிா்வாகி பொன். பாலகணபதி வீட்டுக்குச் செல்கிறாா். அங்கிருந்து சிவகங்கையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறாா் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →