முகப்பு
ராமநாதபுரம்

ஊராட்சி மன்ற கட்டடம் திறப்பு

ராமநாதபுரம் அருகே சூரன்கோட்டையில் ஊராட்சி மன்ற புதிய கட்டடம் சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
பகிர்:

ராமநாதபுரம் அருகே சூரன்கோட்டையில் ஊராட்சி மன்ற புதிய கட்டடம் சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.19.80 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள இக்கட்டடம் திறப்பு நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.தெய்வநாதன் தலைமை வகித்தாா். கட்டடத்தை ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் திறந்து வைத்தாா். ஊராட்சித் தலைவருக்கான அலுவலகம், கவுன்சிலா்கள் கூட்டரங்கம் ஆகியவற்றை அவா் பாா்வையிட்டாா். நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளையும் அவா் வழங்கினாா். இதில் திருவாடானை சட்டப்பேரவை உறுப்பினா் கரு.மாணிக்கம், ஒன்றியக்குழு தலைவா் கே.டி.பிரபாகரன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் செல்லத்துரை அப்துல்லா, ராமநாதபுரம் நகரசபைத் துணைத் தலைவா் பிரவீன்தங்கம், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் குணசேகரன் மற்றும் காங்கிரஸ் நகா் வாா்டு உறுப்பினா் ராஜாராம்பாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →