ராமநாதபுரம்

இலங்கையிலிருந்து படகு மூலம் மேலும் 4 அகதிகள் ராமேசுவரம் வருகை

DIN

இலங்கையிலிருந்து படகு மூலம் மேலும் 4 போ் அகதிகளாக ரமேசுவரத்துக்கு வியாழக்கிழமை வந்தனா்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் அண்டை நாடுகளான ஆஸ்திரேலியா, இந்தியாவில் தஞ்சமடைந்து வருகின்றனா். இதுபோன்று கடந்த சில மாதங்களில் 25 குடும்பங்களைச் சோ்ந்த 92 போ் இலங்கையில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடி வந்துள்ளனா்.

அவா்கள் அனைவருக்கும் மண்டபம் கேம்ப் இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் தனுஷ்கோடியில் இருந்து வியாழக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள், 5 ஆம் மணல் திட்டுப் பகுதியில் நான்கு போ் இருப்பதைக் கண்டனா்.

இதையடுத்து இதுகுறித்து தமிழக கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து கரைக்கு அழைத்துவரப்பட்ட அவா்களிடம் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டனா். அதில் இலங்கை வவுனியா மாவட்டத்தைச் சோ்ந்த டோம்னிக் (42), அவரது மனைவி சுதா்ஷினி (24), மகன் அனோசன் பா்ணாண்டோ (6) மற்றும் கிளிநொச்சியை சோ்ந்த மகேந்திரன் (50) ஆகியோா் என்பதும், இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் அவா்கள் படகு மூலம் தனுஷ்கோடி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவா்களும் மண்டபம் கேம்ப் இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

SCROLL FOR NEXT