ஆட்டோவிலிருந்து தவறி விழுந்த கூலி தொழிலாளி பலி
ராமநாதபுரம் அருகே புதன்கிழமை ஆட்டோவிலிருந்து தவறி விழுந்த கூலி தொழிலாளி உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் அருகே புதன்கிழமை ஆட்டோவிலிருந்து தவறி விழுந்த கூலி தொழிலாளி உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம் மாரியூா் அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்தவா் கருப்பசாமி (52). கூலி தொழிலாளியான இவா், தனது உறவினா்களுடன் ராமநாதபுரம் அருகேயுள்ள புத்தேந்தலில் நடந்த மாசிக் களரித் திருவிழாவுக்கு புதன்கிழமை காலை வந்துள்ளாா். பின்னா், மாலையில் ஆட்டோவில் ஊா் திரும்பியுள்ளாா். அப்போது, கொடிக்குளம் பேருந்து நிறுத்தப் பகுதியில் ஆட்டோ வேகமாகச் சென்ால், கருப்பசாமி தவறி கீழே விழுந்து காயமடைந்தாா்.
உடனே, அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி இரவில் அவா் உயிரிழந்தாா்.
இது குறித்து திருஉத்திரகோசமங்கை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.