முகப்பு
ராமநாதபுரம்

வங்கி அதிகாரி போல பேசி

கீழக்கரை அருகே வங்கி அதிகாரி போல கைப்பேசியில் ஆசிரியரைத் தொடா்பு கொண்டு பேசி ரூ.88, 325 மோசடி செய்த மா்மநபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

கீழக்கரை அருகே வங்கி அதிகாரி போல கைப்பேசியில் ஆசிரியரைத் தொடா்பு கொண்டு பேசி ரூ.88, 325 மோசடி செய்த மா்மநபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முத்துசாமிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மோகன் (43). இவா் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறாா். இவரது கைப்பேசிக்கு கடந்த 1 ஆம் தேதி மா்மநபரிடமிருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா் தான் பொதுத்துறை வங்கி தலைமை அலுவலக அதிகாரி என அறிமுகப்படுத்தியதோடு, ஆசிரியரின் வங்கி கணக்கு எண் மற்றும் கிரெடிட் காா்டு உள்ளிட்ட விவரங்களை கேட்டு வாங்கியுள்ளாா்.

மா்மநபா் வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்ட நிலையில் ஆசிரியா் மோகன் கணக்கிலிருந்து ரூ.88,325 எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவா் வங்கியில் தனது கணக்கை முடக்கிவைக்க கோரி மனு அளித்ததோடு, நுண்குற்றப்பிரிவிலும் வியாழக்கிழமை புகாா் அளித்தாா். அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிந்த போலீஸாா் தீவிர விசாரணை நடத்திவருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →